Monday 1 April 2013

சுவைத்தேன்!

எத்தனையோ தடவை வகுப்பில் குழந்தைகளோடு சேர்ந்து படித்த கட்டுரையொன்று சென்ற வாரம் படித்த போது கொஞ்சம் சிந்தனையில் ஒட்டிக் கொண்டது போல. இரண்டு நாட்கள் முன்பாக கடைக்குப் போயிருந்த பொழுது நிறம் கண்ணைக் கவர... பார்த்தால் dragon fruit.
இங்கு கிடைக்காது என்று நினைத்திருந்தேன். கண்டதும் முதலில் விலையைத்தான் பார்த்தேன், '$ 4.99 on special'.

Pitaya பழம், அது பயிராகும் முறை என்று பல விடயங்களும் பாடத்தில் அறிந்திருந்ததாலும் பாடத்தின் நடுவே சின்னவர் ஒருவர் என்னிடம் 'சாப்பிட்டுப் பார்த்திருக்கிறீர்களா?' என்று கேட்டிருந்ததாலும் வாங்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது.

பாடத்தின் நடுவே, சாமோவன் குட்டியர் ஒருவர் கண்ணை விரித்து, 'மிஸ், அது நஞ்சு, சாப்பிட்டால் இறந்து போவார்கள்,' என்றார். ஐந்து நிமிடங்கள் கழித்து, தான் சொன்னதை மறந்து போய், 'நான் சாப்பிட்டிருக்கிறேன். கீவி போல இருக்கும்,' என்றார். ;)
அது நினைவுக்கு வர, என் உயிருக்கு என்ன ஆகிறது என்று பார்க்கலாம் என்று எடுத்துப் போனால்... விலை வாசிக்கும் இயந்திரம் $9.99 என்கிறது. 

க்றிஸ் என்னைத் திரும்பிப் பார்த்தார் 'வேண்டுமா, வேண்டாமா?' என்கிற பார்வை. இத்தனை விலைக்கு வாங்கிப் போய் பழம் கெட்டிருந்தால் அல்லது சுவை பிடிக்காதிருந்தால்!! 'வேண்டாம்,' 'ஆனால், அங்கு $4.99 தான் போட்டிருந்தது,' என்றேன். ஒன்றுக்கு மூன்று முறை முணுமுணுக்க, மணியடித்து இன்னொரு பையனை வரவைத்து விசாரித்து, அதே '9.99' கேட்டு... கர்ர் ஆனேன். எடுத்திருந்த வாழைப்பழத்திற்கும் வேறு விலை காட்டிற்று இயந்திரம். இரண்டையும் வந்த அந்தப் பையன் எடுத்துப் போக கோழியை மட்டும் தூக்கிக் கொண்டு வெளியேறலானோம்.

அந்தப் பையன் ஓடிவந்து வழிமறித்தார், "நீங்கள் சொன்னது சரிதான், வேண்டுமா?' மனதில் சுவாரசியம் குறைந்திருந்தது. வாழைப்பழத்தை வேண்டாம் என்றுவிட்டு இதை மட்டும் எடுத்து வந்தோம். வாகனத்தில் ஏறிய பிறகுதான் தோன்றிற்று, அதுவும் நாங்கள் சொன்ன விலை தானோ! சரி, கிடக்கட்டும் என்று கிளம்பி வீட்டுக்குப் போய்ப் பார்த்தால் இந்த ஆரவாரத்தில் கோழிக்கும் $4.00 அதிகம் போட்டிருக்கிறார்கள். ;)


இது சிவப்புச்சதை வகைப் பழம். குறுக்காக வெட்டி...
ஐஸ்க்ரீம் ஸ்கூப்பால் குடைந்தால்...
மறு பாதியை நெடுக்குவாட்டாக நறுக்கி தோலை உரித்தேன்.
ஒரே ரத்தக் களரி. ;) சுவை அபாரம் என்று சொல்ல இயலாவிட்டாலும் மிக நன்றாகவே இருந்தது. வெயிலுக்கு இதமாக இருந்தது பழம். விதைகள் ஊறவைத்த கசகசா (சப்ஜா) போல கடிபட்டன. நாக்கு நாவற்பழம் சாப்பிட்டது போல ஆகிற்று. ;) க்றிஸ் தன் பங்கை குளிரூட்டியில் வைத்துச் சாப்பிட்டார்.

இந்தத் தாவரம் ஊரில் என்னிடம் இருந்தது. நானாகவே  orchid என்று நினைத்து மாமரத்தில் தேங்காய்த்தும்பு வைத்து, கட்டி வைத்திருந்தேன். நன்றாக வளர்ந்தது. மறுவருடம் பூத்தது. முதல் வருடம் என்பதாலோ;எப்பொழுதும் ஒரு சமயத்தில் ஒரு பூ மட்டும் இருந்ததாலோ அல்லது பசளை போதாததாலோ தெரியவில்லை, காய்க்கவில்லை. மறு வருடம் நான் கிளம்பி வந்துவிட்டேன். ;(

17 comments:

  1. ஆக ஒரு கொலவெறியோடத்தான் சாப்பிட்டிருக்கீங்கன்னு சொல்லுங்க..

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்!! கட், காப்பி, பேஸ்ட்!!! ;))))

      Delete
  2. ட்ராகன் ஃப்ரூட் கேள்விப்பட்டதோட சரி..வாங்கி நறுக்கி படம் காட்டியதுக்கு நன்றி டீச்சர்! :)

    சிலசமயம் கடைங்கள்ல இப்படி சொதப்பல்ஸ் நடக்கும், நல்ல வெயில்ல நொந்து நூடில்ஸ் ஆகி பிட்டாயா-வை பிட்டுப் பிட்டு சாப்ட்டிருக்கீங்க! ;):)

    ReplyDelete
    Replies
    1. //நூடில்ஸ் ஆகி// ;)) மாகி! வேமிசிலி!! ;))

      Delete
  3. நான் இதை மாலேவில் பார்த்திருக்கேன் ;) ஆனா சாப்பிட்டதில்லை :) கலர் அழகு - வனிதா

    ReplyDelete
    Replies
    1. கலர் அழகாகத்தான் இருந்தது வனி.

      இன்று ஸ்கூல்ல போய் பசங்களுக்கு சொன்னேன். எல்லோரும் எங்கே கிடைக்கும் என்று ஆர்வமா விசாரிச்சுட்டு போறாங்க. ;)

      Delete
  4. ஒரே ரத்தக் களரி....! எதுவும் ஆகவில்லையே...? சந்தோசம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆச்சுங்க. அதை நறுக்கி சாப்பிட்டாச்சு. ;))

      Delete
  5. ஹாய்ய்ய்ய்.... இம்ம்ம்மாஆ...:)

    எப்படி இருக்கிறீங்க? சுகமோ எண்டு கேட்டேன்...;)

    ம். இந்தப்பழம் இங்கும் நான் கடைகளில் பார்த்திருக்கிறேன். வாங்கினதோ சாப்பிட்டதோ இல்லை.

    புதியவகைப்பழமோ காயோ உடனே வாங்கி பரீட்சிக்கப் பயம்....
    என் வூட்டுக்காரருக்கு இன்னிக்கு 20 வருஷத்துக்கு முன்னே இப்படித்தான் ஒரு பழவகை யாரோ கொடுத்தாங்கன்னு வாங்கி சாப்பிட்டு முகத்தில் கண் ச்சும்மா கீறிவிட்டதுபோல இருக்க உப்பி முகம் கைகால் உடல்பூராவுமே கண்மண் தெரியாம வீங்கிட்டார்ர்ர்... அலெர்ஜி ஆகி அதுக்கு வைத்தியம்பார்த்து போதும் போதும் என்றுபோச்சு...:)

    ஆனபடியா அங்கின தூஊஊரத்தில நீங்க காட்டினதை மட்டும் பார்த்து ரசிச்சுட்டு போயிடுறேன் இமா...:)

    ReplyDelete
    Replies
    1. நாங்கள் எல்லாம் வலு கவனம். முதலே
      கூகுள்ல கன ரிசேச் நடத்தி பிறகும் டப்லட் எடுத்து வைச்சுக்கொண்டுதான் பழத்தை வெட்டினன்னான். ;) பயம் இருந்தாலும் மிஸ் பண்ண விரும்புறேல்ல.

      Delete
  6. இதுவரை பார்த்ததில்லை,கேள்விபட்டிருக்கேன் இமா,சாப்பிடலமா வேண்டாமா??

    ReplyDelete
    Replies
    1. சாப்பிடலாம். ஒன்றுமே ஆகவில்லை. ;)

      Delete
  7. பழத்தில தேன் மாதிரி ஜுஸ் நிறைய இருக்கும் போல.. படத்தில வழிந்து ஓடுது இமா..:) இப்பத்தான் இந்த பழத்தை பார்க்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நிறைய ஜூஸ். கிடைத்தால் சாப்பிட்டுப் பாருங்கள்.

      Delete
  8. ஹீ ஹீ நம்மூர் நாகதாளிப்பழம் இது நல்ல சுவை !

    ReplyDelete
    Replies
    1. நாகதாளிப்பழம் பார்த்திருக்கிறேன் நேசன். சாப்பிட்டுப் பார்த்ததில்லை. அது போலதான் இதன் வெளி அமைப்பும் இருக்கிறது.

      Delete
  9. படமே டெரர் ஆ இருக்கு. எனக்குமிது விருப்பம். வாங்கியது இல்லை.ஏப்ரல் 16போஸ்ட். லேட்டானால் இதுதான் நிலை.

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா