Thursday 31 December 2009

நல்வரவு _()_

தினம் தினம் இன்று நாளை என்று கடத்திவிட்டு, இன்று எப்படியாவது திறப்புவிழா நடாத்திவிடுவது என்னும் முடிவோடு அமர்ந்திருக்கிறேன். :)

முதலில் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.


ஊரில் இருந்த மாதிரி இங்கு வருடப் பிறப்பு கலகலப்பாக எல்லாம் இல்லை, சாமப்பூசை கூட இல்லை. ஊரில் இருக்கையில் என்ன நடந்தாலும் பூசை முடிந்த பின், நேரே மாமி வீடு போய் விடுவோம். இரவிரவாக உறவினர் வருகை, வாழ்த்துக்கள் பரிமாறுவது, உபசரிப்பு - முக்கியமாக கைவியலம் கொடுப்பது, வாங்குவது என்று வருடம் ஆரம்பிக்கும்.

இங்கு அவையெல்லாம் அதிகம் இல்லை. புதுமையாக இம்முறை எனக்கு வலைப்பூவுடன் வருடம் பிறந்திருக்கிறது. :)


இங்கு 'சுயபரிமாறல்' முறைதான். வருக, சுவைத்து மகிழ்க. :)



தொடர்ந்து வரும் ஆண்டு உங்களுக்கு உயர்வு தரும் ஆண்டாக அமைய என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
இமா

பி.கு
வருகை தந்தமைக்கு நன்றியாக ஒரு சிறிய அன்பளிப்பு. :)
http://picasaweb.google.co.in/imimma/ThereSACatInTheNeighbourhood#

18 comments:

  1. Aunty,Wish you a very Happy New Year..Have a great 2010!!

    Geno wishes you all the very best for your blogging world..I am going to be one of the frequent visitors for sure! :)

    ReplyDelete
  2. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி ஜீனோ. :)
    //I am going to be one of the frequent visitors for sure!// அப்போ நான் தொடர்ந்து எழுதவேணும், பயமுறுத்துறீங்க. :) மீண்டும் நன்றி.
    ஜீனோவுக்கும் டோராவுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. அம்மா முதலில் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    இனிப்பு வகைகள் அனைத்தும் அருமை....எனக்கு கொஞ்சம் பார்சல் பண்ணி அனுப்புங்க... என்னோட முகவரி இருக்குல...

    நெறைய எழுதுங்க... உங்க உலகத்தை சுத்தி பார்க்க நாங்க ரெடி... ஆமாம் சொல்லிட்டேன்...

    நல்லது அம்மா... மீண்டும் பார்க்கலாம்...

    என்றும் உங்கள்,
    அருண் பிரசங்கி

    ReplyDelete
  4. அருணுக்கும் மலர்ந்திருக்கும் வருடம் நலமாக என் வாழ்த்துக்கள்.

    பார்சல் எதற்கு, இங்கு வந்தால் இதைவிட சிறப்பாக சமைத்துக் கொடுக்கிறேன். :)

    // ஆமாம் சொல்லிட்டேன்...// மிரட்டல் மாதிரி இருக்கு அருண். :)

    வருகைக்கு நன்றி.

    அன்புடன் இமா

    ReplyDelete
  5. இமா, மிகவும் நன்றாக இருக்கு. படத்துடன் எழுதி இருக்கும் கதை மிகவும் அருமை. படிக்க நல்லா இருக்கு.
    (படத்தில் இருப்பது இமாவின் தலையா??)
    (அது சரி.....ஜீனோ இங்கு, இங்கே எப்படி??? நல்ல மோப்ப சக்தி தான் போங்கள்)
    வாணி

    ReplyDelete
  6. ஹூ இஸ் திஸ்??? :))))) நல்வரவு.. எல்லாருக்கும் முன்னே ஜீனோ வந்துவிட்டதோ? :)

    ReplyDelete
  7. இமா.. வர்ட் வெரிஃபிக்கேஷன் எடுத்துடுங்க..

    ReplyDelete
  8. எல் போர்ட் வருகைக்கு நன்றி. நல்வரவு. :)

    ம்ம். பப்பி முன்பே வந்தாயிற்று. மீதிப்பேர் லீஷைப் பிடித்துக் கொண்டு பின்னால் வந்தார்கள். சந்தனாவுக்கு பப்பியைப் பார்த்தால் டெரரிஸ்ட் மாதிரி இருக்கா!?:D

    எடுத்தாச்சு. :)

    ReplyDelete
  9. அன்பு வாணி,

    முதலில் தாமதமாகப் பதிலளிப்பதற்காக என்னை மன்னிக்க வேண்டும்.
    பாராட்டுக்கு நன்றி.
    //படத்தில் இருப்பது// நானேதான். :)

    //ஜீனோ இங்கு, இங்கே எப்படி???//
    போன பிறவியில் MAF இல் வேலை செய்திருக்கும் போல. :)

    ReplyDelete
  10. இமா நானும் வருகை தந்துவிட்டேன்,அழகாக அருமையாக இருக்கு உங்க ப்ளாக்.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வருக, வருக. தங்கள் வரவு நல்வரவாகுக. :)

    வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி ஆசியா.

    ReplyDelete
  12. heyyyyyyyyyyyyyyyyyy

    am the first wishes...

    we welcomes you..

    ReplyDelete
  13. நல்லது. நன்றி. ;)

    ReplyDelete
  14. ப்ளாக் ரொம்ப நல்லா இருக்கு இமா மேடம்..என் பசிக்கு ஏதும் தீனி கிடைக்குமா என் நினத்தேன்..ஏமாறவில்லை.

    என் தளத்திற்கு வருகை தந்தமைக்கும் நன்றி ஆசிரியரே!

    அடிக்கடி என் ப்ளாக் வாங்க..ரொம்ப சந்தோசப்படுவேன்..நன்றி!

    ReplyDelete
  15. ஆஹா! ஷேக் இங்கே இருக்கிறீர்களா? ;) ம். நல்வரவு. பாராட்டுக்கு நன்றி.
    முடிந்தபோதெல்லாம் வருகிறேன்.
    புதிய வேலை எல்லாம் எப்படிப் போகிறது?

    'ஆசிரியரே' எல்லாம் வேண்டாம். ;) இமா மட்டும்.

    ReplyDelete
  16. \\கைவியலம் கொடுப்பது, வாங்குவது//

    what is that Imma ?

    ReplyDelete
    Replies
    1. இதற்குத் தனி போஸ்ட் போடலாம் போல இருக்கே வாணி! :-) வாக்குக் கொடுக்கப் பிரியமில்லை. மறதித் திலகம் இமா. எப்படியும் நாளைக்குள் சொல்கிறேன்.

      Delete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா